Published On: Thu, Dec 7th, 2017

அதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் ?

 

எதுக்கும் ஒரு கால நேரம் வேண்டாமா என்பார்கள். செக்ஸ் உறவுகளுக்கும் கூட கால நேரம் பார்ப்பவர்கள் உண்டு. சிலருக்கு அதுகுறித்தெல்லாம் கவலையில்லாமல் இருக்கும். எப்போது தோன்றுகிறதோ அப்போது தேவை என்ற மன நிலையில் இருப்பவர்கள் அவர்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டு்ம். அருமையான வின்டர் நேரத்தில் அதிகாலையில் எழுந்து உறவுக்கு தயாராவது போல ஒரு அருமையான விஷயம் இல்லை என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மிக மிக ரம்மியமான அனுபவமாக இது இருக்கும் என்பது அவர்களின் கூற்று.

வின்டர் எனப்படும் குளிர்காலம்தான் செக்ஸ் உறவுகளுக்கு சரியான காலம் என்கிறார்கள் இவர்கள். அதுவும் காலையிலேயே செக்ஸ் உறவை மேற்கொள்வது மிக மிக சிறப்பான ரொமான்டிக் விஷயம் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ரொமான்ஸ் மனோ பாவத்தையு அகழ்ந்தெடுத்து அருமையான அனுபவத்தைக் கொடுக்கிறதாம் இந்த குளிர்கால உறவுகள். மேலும் எப்போதும் ஒரே மாதிரியான சூழலிலேயே உறுவு கொண்டு போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.

அடுத்த நாள் அதிகாலையில் நடக்கப் போகும் ஆட்டத்துக்காக இரவெல்லாம் கற்பனை செய்து, குதூகலிப்புடன் தூங்கப் போய்,அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து உறவுக்குள் நுழைவது நிச்சயம் சிலிர்ப்பான ஒன்றுதான்.

குளிர்காலம் என்றில்லாமல், பிற சமயங்களிலும் கூட அதிகாலை செக்ஸ் உறவு என்பது மனதுக்கும், உடலுக்கும் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது செக்ஸாலஜிஸ்ட்டுகளின் கருத்தாகும். அதிகாலையில் நமது மனமும், உடலும் புத்துணர்வுடன் இருக்கும், புதுப் பொலிவுடன் இருக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். இந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது இருவருக்குமே அது இனிமையைக் கூடுதலாக கொடுக்குமாம்.

மேலும் நல்லதொரு தூக்கத்திற்குப் பின்னர் உடல் புதுத் தெம்புடன் இருக்கும் என்பதால் அதிகாலை உறவின் சுகமே அலாதியானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

அதிகாலையில் உறவு கொள்வதை விட இன்னும் சிறப்பான விஷயம், போர்வைக்குள் இருவரும் செய்யும் முன்விளையாட்டுகள்தான். இந்த முன்விளையாட்டுக்கள் அதிகாலை உறவுக்கு மேலும் வலு சேர்க்கிறதாம்.இரவு நேரங்களில் இருப்பதை அதிகாலையில்தான் இந்த முன்விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் கிடைக்கிறதாம்.

சின்னச் சின்ன தொடுதல்கள், உரசல்களுடன் அதிகாலை விளையாட்டில் இறங்கும்போது அந்த இன்ப உணர்வுகள் நாள் முழுமைக்கும் உங்களை வேகமாக வழி நடத்திச் செல்ல உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிகாலையில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. அதற்கும், அதிகாலை உறவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதிகாலை உறவுகளுக்கும், மற்ற நேரத்து உறவுகளுக்கும் நிச்சயம் பெரிய வித்தியாசம் உண்டு என்பது செக்ஸ் துறை நிபுணர்களின் கருத்தாகும்.

என்னதான் இன்ஸ்டன்ட் காபி சுவையாக இருந்தாலும் பில்டர் காபி போல வராது இல்லையா, அது போல இதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts