Published On: Tue, Jul 15th, 2014

இடுப்பு மடிப்பு உஷார்

திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில்தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டிமித்ரி ட்யுமின் தலைமையில் உடல் பருமன் குறித்து சமீபத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். 1986&ம் ஆண்டு முதல் 2008&ம் ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடந்தது.

ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்கள் திருமணத்துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறுவிறுவென அதிகமாகிறது. இதில் பெரும்பாலானவர்கள் 30 வயதை கடந்தவர்கள். பெரும்பாலும் இடுப்பு பகுதியில்தான் அதிகம் சதை போடுகிறது. இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத்தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் ஆகாதவர்களைவிட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts