Published On: Wed, May 10th, 2017

உங்களுக்கு குழந்தை பிறக்குமா ? உங்கள் விந்தணுவை வைத்து கண்டுபிடித்துவிடலாம்!

தவறான உணவு வகைகளால் பெரும்பாலான ஆண்களின் விந்தணு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தை பாக்கியத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் ஒரு ஆண் ஆரோக்கியமான கருவளத்துடன் இருக்கின்றாரா என்று எப்படி கண்டுபிடிப்பது.

ஆண்களின் விந்தணுவை சோதிப்பது எப்படி:

ஆணின் விந்தணு அடர்த்தியாக, பிசுபிசுப்புத் தன்மையுடன் அதிகமாக உற்பத்தியானால் அவர்களின் கருவளமானது மிகவும் ஆரோக்கியமானது என்று அர்த்தமாகும்.

ஒரு ஆணுக்கு கருவளம் குறைவாக இருப்பதனை அவர்களுடைய வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தெரிந்து விடலாம். எப்படி தெரிந்து கொள்வது என்றால் அளவுக்கு அதிகமான தொப்பை வந்தவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் மிகவும் குறைவாக இருக்கும்.

சிறுநீர்ப்பை குழாய் என்பது ஆணுறுப்பின் நுனி பகுதியில் இருக்கும் துளையாகும். அதன் வழியாகத்தான் விந்தணு வடிதல் நடைபெறுகிறது. எனவே ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் துளை இருக்க வேண்டும்.

ஆண்களின் ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கும். எனவே அது எந்தளவுக்கு பெரியதாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு விந்தணுக்களின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். அதிலும் வால்நட் அளவில் இருந்தால் குழந்தை வளமும் நன்றாக இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

ஆண்களின் முகம் கை அக்குள் மற்றும் ஆண் உறுப்புகளை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு வளமையாக இருக்கின்றது என்று அர்த்தமாகும்.

ஒரு ஆணின் விந்தணு எண்ணிக்கை அல்லது வெளியேறுகின்ற அளவு மிகவும் குறைவாக இருந்தால், அவர்களின் கருவளத்தில் பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தமாகும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts