Published On: Thu, Dec 7th, 2017

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர்.
உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபி யருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்கும ப்பூவும், சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப் பட்டுள்ளன.
வைட்டமின்களும் தாது உப்புகளும்
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்த நாகம் இன்றியமையாதது.
எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இரு க்கும் பொட்டாசியம் ஆண் மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண் ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலி யவைகளும் காதல் உண வுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலிய வைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்
பிரசித்தி பெற்ற உணவுகள்
பாதாம் பருப்பு – தொன்று தொ ட்டு ஆண்மையையும், மக்க ளைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படு கிறது. கரு மிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப் படுகின்றன.
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மைய லிலும் பயனாகிறது!
வாழைப்பழம்
பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயா ரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக் கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்க ளின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டு கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யா பழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெ ண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்க ளின் தசைகளை வலுப்படுத் தும்.
சாக்லேட்
சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சி டான்ட். இதில் உள்ள தியோப் ரோமைன் வேட்கையை பெருக்கும். பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட் டும் உணவுகள்.
காதல் ஆப்பிள்
வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபி யாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய் கறி யாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள் ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts