உடலுறவு பற்றி நீங்கள் நினைப்பது உண்மை தானா? இங்கே சரிபார்த்துக் கொள்ளுங்கள்…

உடலுறவு தான் பெரும்பாலானோரை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது என்றே சொல்லலாம். மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை உள்ளுக்குள் இருந்து வெளியேற்ற உடலுறவு சிறந்த வடிகாலாகச் செயல்படுகிறது.

மனிதனின் வாழ்நாளில் இளமைக்காலம் தொடங்கி, தள்ளாடும் வயது வரையிலும் உடலுறவு, காமம், காதல் சார்ந்த விஷயங்களுடன் பயணிக்கிறான். அவற்றைப் பற்றி சிந்திக்கிறான். அதனாலேயே அவற்றைப் பற்றிய வதந்திகளும் சந்தேகங்களும் மிக அதிகமாகவே உலவுகின்றன.

உண்மையிலேயே உடலுறவு பற்றி நாம் நம்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்கள் உண்மைதானா? என்று ஆராய்ந்து பார்த்தால் அதில் பெரும்பாலானவற்றிற்கு இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் உடலுறவை ஒரு முறைப்படுத்தப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி என்கிறார்கள். இந்த உடற்பயிற்சியை நம் முன்னோர்கள் சரிவர பயிற்சி செய்து வந்ததற்கான சாட்சியாக நமக்கு கிடைத்திருப்பவை தான் காம சூத்திரமும் கஷிராஹோ சிற்பங்களும்.

உடலுறவு பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் உண்மையல்ல. வெறும் வதந்தி என்பது தெரிந்தால் உங்கள் மனசு எவ்வளவு பாடுபடும். அப்படி என்ன மாதிரியான வதந்திகளை நாம் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறோம்? அவற்றில் எது உண்மை? எது பொய்?

அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் எவ்வளவு உண்மைத்தன்மை வாய்ந்தவை என்பதை கீழே படித்து நீங்களே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் பொதுவாக நம்பப்படுகிற ஒரு விஷயம் அந்தரங்க உறுப்பின் அளவைப் பொருத்தே இன்பம் அதிகரிக்கும் என்பது தான். அந்தரங்க உறுப்புகள் அளவில் பெரியதாக இருந்தால், உடலுறவின்போது சுகமும் அதிகரிக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல.

வெறும் 4 சென்டிமீட்டர் அளவுக்குள்ளேயே நரம்புகள் தூண்டப்பட்டு கிளர்ச்சி உண்டாகும். காம இச்சை அதிகமாகும்போது, அந்தரங்க உறுப்பின் அளவு பெரிதாகும். ஆனால் அதில் மூன்றில் ஒரு பங்கே சுகமளிக்கப் போதுமானது தான். உறுப்பின் அளவுக்கும் இன்பத்துக்கும் சம்மந்தம் கிடையாது.

 

ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் ஆகிய உணவுகளை படுக்கைக்குச் செல்லும்போது சாப்பிட்டால், உடலில் சக்தி அதிகரிக்கும். அதனால் விரைவில் உச்சமடைய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல.

 

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிகமாக, உடலுறவு சார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உடலுறவு சார்ந்த விளையாட்டில் எப்போதும் ஆண்களை மட்டுமே மாட்டிவிடுகிறார்கள். இது ஒருவர் விளையாடும் விளையாட்டல்ல. அதேபோல் பெண்களும் ஆண்கள் தான் இந்த விஷயத்தில் வல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். அது உண்மையே அல்ல.

சாப்பிடுவது, தூங்குவது, கனவு காண்பது போன்று அந்த விஷயங்களில் ஹார்மோன்களின் தூண்டுதல் இருவருக்குமே ஒன்று தான். ஆனால் பெரும்பாலும் ஆண்கள் தங்களுடைய விருப்பங்களை முதலில் சொல்லி, ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் தயங்குகிறார்கள்.

பெண்கள் நீலப் படங்களை விரும்பமாட்டார்கள் என நினைக்கிறோம். ஆனால் உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் நீலப்படங்களைப் பார்ப்பதாக, ஆய்வு முடிவுகள் பல வெளிவந்துள்ளன.

பெண்கள் மாதவிலக்கு காலங்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க மாட்டார்க்ள என்று நினைக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களாக இந்த நம்பிக்கை இருந்து வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்து. ஏனெனில் உள்ளே செல்லும் விந்துக்கள் சில நாட்களுக்கு உயிரோட்டமுடையதாகவே இருக்கும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு.

பெண்கள் உச்சத்தை உணர முடிவதில்லை என்ற கருத்து இருக்கிறது. பெண்கள் ஆண்களைப் போன்று உச்சத்தை உணர முடிவதில்லை. இது தான் உச்சம் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனாலேயே ஆண்கள் அந்த விஷயங்களில் தோல்வி அடைகிறார்கள் என்று எண்ணுகிறோம். ஆனால் பெண்ணின் உணர்ச்சிப் பிரதேசத்தில் நரம்புகள் தூண்டப்பட்டு, அதிர்வுகள் உண்டாகும். அதை பெண்களால் நன்கு உணர முடியும்.

பெண்கள் எல்லோருக்கும் ஜி- ஸ்பாட் என்னும் உணர்ச்சிப் பிரதேசம் உண்டு. அதைக் கண்டடைந்து, குறிப்பாகத் தீண்டினாலே தான் சுகம் அதிகரிக்கும் என்று நினைத்து, ஆண்களை ஜி- ஸ்பாட்டை கண்டடைய முயற்சிக்கிறார்கள். அப்படி ஒரு பகுதி இருப்பது உண்மை தான். அது சுகத்தை அதிகரிக்கச் செய்யும் தசைப்பகுதிகளில் ஒன்று தானே தவிர, அது மட்டுமே அதிக சுகத்தைக் கொடுக்கும் என்பது உண்மையல்ல. அதனால் ஜி – ஸ்பாட்டை தேடிக் கண்டடைகிறேன் என்று நேரத்தை வீணாக்காமல் பெண்களின் உணர்ச்சிப் பிரதேசங்களைத் தீண்டி, சுகத்தைப் பெற்றிட முயலுங்கள்.

பெண்களிடமிருந்து இன்ப முனகல் வந்தால் தான் அவர்கள் உறவின் போது இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருகு்கிறார்கள் என்று எண்ணுகிறோம். அது தவறு. அனுபவித்தலும் முனகலுக்கு ஆளுக்கு ஆள் வேறுபடும். சில சமயங்களில் முனகல் ஆண்களுக்கும் அதிக கிளர்ச்சியை உண்டாக்கும். சில நேரங்களில் மௌனமே உடலுறவில் உங்களுக்கு மறக்க முடியாத பொன்னான நேரமாகவும் மாறும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts