உயிர் அணுவுக்கும், பாலுறவுக்கும் தொடர்பு உண்டா?

பாலியல் உறவு அல்லது செக்ஸ் உறவு என்பதே ஒரு கலை எனலாம். அதனால் தான் `மன்மதக் கலை’ என்று குறிப்பிட்டனர். ஆணின் விந்துவில் உள்ள உயிர் அணுவின் தன்மைக்கும், உடலுறவு செயல்தன்மைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.

செக்ஸ் கல்வி இல்லாமை, அறியாமை காரணமாக உடலுறவு விஷயங்கள் குறித்து படித்தவர்களிடம் கூட நிறைய மூட நம்பிக்கைகள் உள்ளன. பெண்ணின் சினை முட்டையுடன் கணவனின் விந்தில் உள்ள உயிர் அணு சேரும்போதுதான் இயற்கையான குழந்தைப் பேறு சாத்தியமாகிறது.

ஒரு சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக போதிய அளவு உயிர் அணுக்கள் இல்லாமை, உயிர் அணு இயக்கம் இல்லாமை போன்ற குறைபாடுகள் காரணமாக குழந்தைப் பேறை மனைவிக்குக் கொடுக்க இயலாத நிலை ஏற்படலாம். இதுவே ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.

ஆனால் உடலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடிந்தாலே தமக்கு எவ்விதக் குறையும் இல்லை என இத்தகைய ஆண்கள் நினைப்பது தவறு. பாலுறவுப் புணர்ச்சியில் திருப்தி என்பது வேறு, உயிர் அணு செயல்பாடு என்பது வேறு.

எனவே, குழந்தைப் பேறு இல்லாதவர்கள் உரிய மருத்துவர்களை அணுகி முதலில் ஆண் மலட்டுத் தன்மை உள்ளதா? என்பதை அறிந்து, அதன்பின் மனைவிக்கு சிகிச்சையைத் தொடங்கலாம்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts