Published On: Fri, Feb 24th, 2017

குழந்தைகளின் உணர்வு திறனை குறைக்கும் டிஜிட்டல் கருவிகள்

ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனரும், டிஜிட்டல் புரட்சியின் தந்தையுமான ஸ்டீவ் ஜாப்ஸ் தனது குழந்தைகளை ஐபாட் உபயோகிக்க அனுமதிக்க மாட்டார். ஏனெனில் குழந்தைகள் அந்த சாதனங்களுக்கு அடிமைகளாகி விடக் கூடாது என்கிற பயமே ஆகும்.

குழந்தைகள் திரையில் கற்றுக் கொள்வதை விட வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அதிகம் கற்றுக் கொள்கின்றனர். மேலும் இவை குழந்தைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செய்யும் விளையாட்டுகள் மூலமாக அமைகிறது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்பின் படி 12 மாத குழந்தை ஒரு நாளில் 2 மணி நேரம் திரையில் நேரத்தை செலவழிக்கின்றனர் என்பதை உறுதி செய்துள்ளது.

குழந்தைகள் திரையின் படங்களை பிரகாசமான வண்ணங்களில் இயக்க மட்டுமே முடியும். ஆனால் அவை குழந்தைகளின் மூளையின் செயல்திறனைப் பாதிக்கும். ஆனால் 2 வயது குழந்தையால் நல்ல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். இந்த மாதிரியான குழப்பத்தின் காரணமாக குழந்தைகள் திரையில் நேரம் செலவிடுவதை தவிர்ப்பதே நல்லது.

தொழில் நுட்பத்தின் ஆரம்ப வெளிப்பாடுகளான ஸ்மார்ட் போன், கணினி, டேப்லெட் இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிக்கப்படும். இவை அனைத்தும் குழந்தைகளின் இயற்கையான மூளை வளர்ச்சியை பாதிக்கும்.

3 மற்றும் 4 வயது குழந்தைகள் விளையாட்டு மற்றும் இசை கருவிகளை இசைத்தல் மூலம் தனது கைவிரல்களின் திறனை ஒருங்கிணைக்க முடியும் ஆனால் ஐபாட் உபயோகிப்பதால் திரையை விரல்களால் தேய்ப்பதன் மூலம் இந்த திறனை இழக்கின்றனர்.

இளம் குழந்தைகள் நடத்தல், ஓடுதல், விளையாடுதல், மரம்/மலை ஏறுதல், வளைந்து விளையாடுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமலேயே இருக்கின்றனர். ஏனெனில் நாள் முழுவதும் ஐபாட்-ல் இருப்பதால் இது குழந்தைகளின் உணர்வு திறனைக் குறைக்கிறது.

குழந்தைகளின் உணர்ச்சிகளின் வளச்சிகளில் மிகவும் முக்கியமானது சுய கட்டுப்பாடு ஆகும் ஆனால் இந்த கருவிகளை தொடர்ச்சியாக உபயோகிப்பதால் குழந்தைகள் தங்கள் சுய கட்டுப்பாட்டை இழக்கின்றனர்.

குழந்தைகள் இந்த மாதிரி சாதனங்களில் விளையாடுவதை விட புதிர்கள், கட்டிடம் கட்டும் தொகுதிகள் இவற்றை கொண்டு விளையாடுவதால் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே கணிதம் மற்றும் அறிவியல் திறன் நன்றாக வளரும்.இந்த தொழில் நுட்ப கருவிகளை உபயோகிக்கும் குழந்தைகளை விட வீட்டிலும்,நண்பர்களுடனும் விளையாடும் குழந்தைகள் சிறந்து விளங்குவர்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts