Published On: Thu, Dec 7th, 2017

கூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்!

 

கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்ஸிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.

நேற்று கோவை நகருக்கு வந்திருந்தார் ஹன்ஸிகா. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.

இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.

இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர்.

இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், “ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும்,” என்றார்.

ஏற்கெனவே சென்னையில் இதே அனுபவத்துக்குள்ளானார் ஹன்ஸிகா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts