Published On: Fri, Sep 22nd, 2017

‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா? கங்கனா ரணாவத் கேள்வி

இந்தி நடிகை கங்கனா ரணாவத் திரை உலகில் உள்ள ஆணாதிக்கம் பற்றி இப்படி கூறுகிறார்….

“நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல. எனக்கு தோழிகளை விட ஆண் நண்பர்கள் தான் அதிகம். ஆனால் ஆணுக்கு பெண் நிகரானவள் இல்லை என்று கூறுவதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமா துறையில் சில வி‌ஷயங்களை ஆண்கள் செய்தால் சரி. பெண்கள் செய்தால் தவறு என்கிறார்கள். உதாரணமாக நடிகர்கள் ‘செக்ஸ்’ வைத்துக்கொண்டால் அது ஜாலி. அதையே பெண்கள் செய்தால் குற்றம்.

சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களுடைய மகன்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதை பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மகள்கள் ‘பிகினி’ உடை கூட அணிய அனுமதிப்பதில்லை. ஒரு நடிகரும் அவருடைய மகனும் பிகினி உடை அணிந்த 15 பெண்களுடன் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய மகள்கள் மட்டும் போர்த்திக்கொண்டு இருக்க வேண்டும்.

நான் நடித்த ‘கேங்ஸ்டர்’ படம் ரிலீஸ் ஆனபோது என் அம்மா சந்தோ‌ஷப்பட்டார். ஆனால் என் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை.” என்றார்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts