Published On: Thu, May 18th, 2017

திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான சில டிப்ஸ்..

காதலில் வயப்படுவது என்பது ஒரு அழகான விசயமாகும். அது உங்களுக்கு நடக்கலாம். காதலில் இருக்கும் போது தான் அதன் அழகும் புனிதமும் உங்களுக்கு புரியும். ஆனால் இவரை தான் காதலிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியுமா? நிலையில்லா ஒருவரை காதலிக்கவோ அல்லது சிக்கல்களை உண்டாக்கும் ஒருவரை காதலிக்கவோ வாய்ப்புகள் இருக்கலாம். ஏன், ஏற்கனவே திருமணமான ஒரு ஆணை காதலிக்கவும் கூட வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் அதனை எண்ணி நீங்கள் வெட்கப்பட தேவையில்லை. ஆனால் நீங்கள் விரும்பும் திருமணமான நபர் உங்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது தான் உண்மையான பிரச்சனைகளே எழும். ஆம், அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவருடன் வைத்திருக்கும் உறவு பெரும் சிக்கலை உண்டாக்கும்.

தனிமையில் இருக்கும் போது கீழ்கூறியவைகளை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அப்படி செய்கையில் இந்த பொல்லாங்கான விஷயத்திலிருந்து விரைவாகவே மீண்டு வரலாம்

உங்கள் தன்மானம் எங்கே? உங்களை யாரவது விரும்பி உங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் போது நல்ல உணர்வுகள் இருப்பது இயைபு தான். ஆனால் அது உண்மையிலேயே இருக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் தன்மானத்தை இழக்கிறீர்களா? அவருக்கென ஒரு குடும்பம் உள்ளது. அவர்களுடன் தான் அவர் வாழவும் செய்யப்போகிறார். அவர் உங்களை தீவிரமாக நேசிக்கலாம்.

ஆனால் உண்மையில் உங்கள் உறவுக்கு வருங்காலம் என்பதே கிடையாது. மேலும் குடும்பத்தை கெடுக்கும் ராட்சசியாக பார்க்கப்படுவீர்கள். இப்படிப்பட்ட உறவால், கண்ணீரையும் சோகத்தையும் தவிர உங்களுக்கு வேறு என்ன கிடைக்கும்? யோசித்து பாருங்கள்.

அவர் தன் மனைவியை விட்டு பிரிவாரா? அவர் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் கூட உங்களிடம் உறவில் ஈடுபட சம்மதித்திருக்கும் பெரிய உள்ளம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்காக அவர் தன் குடும்பத்தை தூக்கிப் போட்டு கொண்டு வருவார் என்று நம்புகிறீர்களா? அவருக்கென ஒரு வீடு உள்ளது, சொல்லப்போனால் சந்தோஷமான ஒரு வீடு. அவரை பொறுத்த வரை, அவர் ருசித்து உண்ணும் ஒரு துண்டு கேக் மட்டுமே நீங்கள்.

அவர்களின் குழந்தைகள் கதி? அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா? அவர் மனைவி இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்? இப்படி நீங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம் உங்களை காலா காலத்திற்கும் ஆட்டி படைக்காதா என்ன? உங்களால் அவர் குடும்பம் பிரிந்த பின், குழந்தைகளின் கதி என்னவாகும்? ஆண்கள் மீதும் வாழ்க்கையின் உறவுகள் மீதும் அவர் மனைவி நம்பிக்கை இழந்திருப்பார் அல்லவா? இவைகளை பற்றியெல்லாம் நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நீங்கள் இதை விட சிறந்த ஒன்றுக்கு தகுதியானவர் உங்களுக்கு திருமணமான ஆண் மட்டுமே கிடைத்தாரா? உங்களை காதலிக்கவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்ளவும் திருமணமாகாத ஒரு ஆண் கூடவா இல்லாமல் போய் விட்டார்? அழகிய, முழுமை பெற்ற பெண் நீங்கள். ஏன் திருமணமாணவரோடு குடியிருக்க விரும்புகிறீர்கள்? இந்த உறவை துண்டித்து விட்டு உங்களுக்காக காத்திருக்கும் திருமணமாகாத ஆணை தேர்ந்தெடுங்கள். தேடி பாருங்கள், உங்களுக்கான நல்ல தேர்வுகள் கண்டிப்பாக இருக்கும்.

காதலின் காதல் காதல் என்பது முழுமை பெற்றது; உணர்ச்சியை மீறி அது எதையும் பார்க்காது. அதனால் நீங்கள் காதலில் விழும் போது அதற்காக நீங்கள் அதிகமாகவே உணர்ச்சிவசப்படுவீர்கள். அதை விட்டு மீண்டு வருவது கஷ்டமே. ஆனால் காதல் புரிந்து கஷ்டப்படுவதை விட அதனை விட்டு வெளியேறுவதே புத்திசாலித்தனம். வெளியே வாருங்கள்.

வேறு எங்காவது சென்று உங்கள் கைப்பேசி எண்ணையும் மாற்றிடுங்கள். அவரை விட்டு விலகியே இருங்கள். உங்கள் காதல் நினைவுகள் உங்களுக்கு மன வருத்தத்தை அளித்தாலும் கூட, அதனை விட்டு வெளியே வந்து விடுங்கள். மற்றவர்கள் சொன்னதற்காக செய்யாமல் உங்களுக்காக நீங்களே இதனை செய்யுங்கள். பல மதிப்பீடுகள் இருந்தாலும் கூட அவைகள் உங்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பு சோடை போகவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts