Published On: Thu, Dec 7th, 2017

நான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. ! எப்போதும் சின்ன பொண்ணுதான்!

 

நான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த நேரத்தில் தேவையில்லாமல் எனக்கு திருமணம் என்றெல்லாம் எழுதலாமா, உண்மைய சொன்னா இன்னும் வயசுக்கு கூட வரேல நான்! என்று சூடாகக் கேட்டுள்ளார் தமன்னா.

தமன்னாவுக்கும் இன்னொரு நடிகருக்கும் காதல் என்றும், தமன்னா திருமணத்துக்குத் தயாராவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர் தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், அஜய் தேவ்கனுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறியிருக்கிறார் தமன்னா. எனவே திருமண செய்தியில் எதுவும் உண்மை இருக்குமோ என்ற கேள்வியை அவரிடமே கேட்டனர் நிருபர்கள்.

இதற்கு பதிலளித்த தமன்னா, “தெலுங்கில் மூன்று படங்களை நான் முடிக்க வேண்டி உள்ளது. மூன்றுமே பெரிய படங்கள். அதனால்தான் வேறு வாய்ப்புகளில் கவனம் செலுத்தவில்லை. அடுத்து நான் தமிழில் ஒரு படம் ஒப்புக்கொள்ளவிருக்கிறேன். அதனால்தான் இந்திப் பட வாய்ப்பையே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

அடிக்கடி என் திருமணம் எப்போது என மீடியா கேட்டு வருகிறது. என் திருமணத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு நன்றி. ஆனால் நான் சின்னப் பொண்ணு. இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திருமணம் பற்றி எழுத ஒன்றுமே இல்லையே,” என்றார்

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts