பார்த்த உடனேயே கிறங்கடிக்கும் கவர்ச்சியான கண்கள் வேண்டுமா? ..

பெண்களுடைய கண்களை காந்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களை முதலில் கொக்கி போட்டு இழுக்க வைப்பது அவர்களுடைய கண்கள் தான். சாதாரணமாகவே பிறரைக் கவரும் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்டினால், பிரபஞ்சமே கூட பற்றிக் கொள்ளும் வாய்ப்புண்டு.

எல்லோருடைய கண்களும் ஒரே நிறத்தில் இருப்பதில்லை. ஆனால் அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எந்த வகையான கண்ணாக இருந்தாலும் அதைக் கவர்ச்சியாகக் காட்ட முடியும்.

கண்களுக்கு ஐ ஷேடோ பயன்படுத்துவது உங்கள் கண்களை முகத்திலிருந்து பளிச்சென வேறுபடுத்திக் காட்டும்.

பிரௌன் கலர் ஐ ஷேடோவைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது. அது உங்களுடைய கண்களை சோர்வாகக் காட்டும்.

முகத்துக்கு மிக அடர்த்தியாக மேக்கப் போட்டால், எத்தனை ஐ ஷேடோக்கள் போட்டாலும் கண்கள் டல்லாகத் தான் தெரியும். அதனால் ஐ ஷேடோவைச் சுற்றி சில்வர் அல்லது கோல்டு கலரில் ஐ லைனரைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

கண் இமைகளில் லைட் கலர்களில், இலேசாக மின்னக்கூடிய வகையிலான ஐ ஷேடோக்களைப் பயன்படுத்துவது உங்கள் கண்களை கவர்ச்சியாகக் காட்டும். இதுவே பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்திடும்.

கண்களை அழகுபடுத்துவதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கண்களை விட முகத்துக்கு அடர்ந்த நிறத்தில் மேக்கப் போடக்கூடாது. லிப்ஸ்டிக் போடும்போதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

அப்படியில்லை என்றால், உங்கள் கண்கள் தூங்கி விழுவது போலத் தெரியும்.

கண்களில் மேக்கப்பை கலைக்கும் போது எல்லா வகையான ரிமூவர்களிலும் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைக் கலந்து கொண்டால், கண்களில் உள்ள ஐ லைனர்களை எடுப்பது எளிதாக இருக்கும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts