Published On: Sun, Sep 18th, 2016

பாலுறவும், குழந்தை பிறப்பும்

பல தம்பதியர் திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் கூட தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றும், தங்களின் பாலுறவுப் புணர்ச்சி முறை சரியாக இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கணவன் – மனைவி இருவரில் இருவருக்குமே குறையேதும் இல்லாமல் இருந்த போதிலும் கூட குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படலாம்.

வேறு சிலருக்கு கணவன் – மனைவி இருவரின் பாலுறுப்பு
பொருந்தாத தன்மை இருக்கலாம்.

சில பெண்களுக்கு பாலுறவுப் புணர்ச்சியின் போது வலி ஏற்படலாம். அதன் காரணமாக ஏற்படும் வெறுப்பால், குழந்தைப் பேறு ஏற்படாமல் போகலாம். சிலருக்கு பல்வேறு காரணங்களால், உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டையுடன் இணையாத நிலை உருவாகலாம்.

எனவே, பாலுறவுப் புணர்ச்சிதான் கொள்கிறோமே, ஏன் இன்னமும் குழந்தைப் பிறக்கவில்லை என்று நினைப்பதை கைவிட்டு, உரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்தல் அவசியம்.

பாலுறவுப் புணர்ச்சிக்கும், குழந்தை பிறப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

பாலுறவுப் புணர்ச்சியை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பவர்களுக்குக் கூட குழந்தை இல்லாமல் போகலாம். அதேபோல, குழந்தை பிறந்த தம்பத்திகளில் சிலர், பாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் திருப்தியற்ற நிலையைக் கொண்டிருக்கலாம். எனவே எந்த அடிப்படையில் நீங்கள் பாலுறவுப் புணர்ச்சி கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறியவும். தேவைப்பட்டால், அதற்கு உரிய டாக்டர்களை அணுகி ஆலோசனையைப் பெறுங்கள்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts