Published On: Fri, Feb 26th, 2016

மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான‌ வழிகள்!!!

மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான‌ வழிகள்!!!
மன நிம்மதி
நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களும், சூழலும் சில வேளைகளில் நமது மன அழுத்தத்தினை
அதிகரிக்கும். மன அழுத்தம் அதிக ரிக்கும் போது மன அமைதி கிடை க்காது. இந்த வேளைகளில் நமது மூளை ஒரு ஓய்வு நிலைக்கே வ ராது. உதாரணமாக, நாம் தூங்கா மல் விழித்திருக்கும் பல இரவுகளை நினைத்துப் பாரு ங்கள், அந்த ஒவ்வொரு இரவிலும் எதையாவது ஒரு பிரச்சனையினை தீர்ப்பது குறித்து நாம் சிந்தித்து இருப் போம். அந்த பிரச்சனைக்கா ன தெளிவான முடிவு நமக்கு கிடைக்கும் வரை நமக்கு தூ க்கம் வராது. இப்படி நம்மை ச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை நாம் மாற்ற இயலா து, ஆனால் நம்மை மாற்றிக் கொ ள்ளலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க வாழ்க்கையின் பிற செ யல்களையே நாம் கையில் எடுத் துக்கொள்ளலாம். வாழ்க்கையில் மூன்று விஷயங்களை செயல்படுத்துவதன் மூலம் நா ம் நமது மன அமைதியினை பெற்று க்கொள்ள முடியும். அந்த மூன்று விஷயங்களைப் பற்றிதான் தற்போது விரிவாகப் பார்க்க போகிறோம்.
1. எதிலும் சிறிதாக ஈடுபடுங்கள்
மன அழுத்தம் வர முக்கியக் காரணம் நாம் ஒரு செய லில் அதிக ஈடுபாடு காட்டுவது தான். நீங்கள் அதிக பசியுடன் இருந்தால், தேவையான தூக்கம் இல்லாமல் இருந்தால் கண்டிப் பாக இது போன்ற மன அழுத்தம் ஏற்படும். இது போன்ற நேரங்க ளில் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு நிதானமாக சாப்பிடுங்கள், நிம்மதியாக உறங்க முய ற்சி செய்யுங்கள், உணவு முறையில் சத் தான மற்றும் சிறிது சூடானஉணவுகளை சாப்பிடத் தொடங்குங்கள். உங்களுக்கு ப் பிடித்தவர்களுடன் நேரத்தினை செல விடுங்கள். பொதுவான விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மிக நெருங்கியவராக இருந்தால் அவர் களைக் கட்டிப் பிடித்தல், முத்தம் கொடு த்தல், கை கோர்த்துக் கொண்டு பூங்கா அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களி ல் ஒரு உலா சென்று வாருங்கள். இப்படி உங்களுக்கு மிகவும் பிடித்த செயல்களில் தொடர்ந்து ஈடுபடுங்கள். இது உங்களின் மூளைக்கும், மன திற்கும் ஒரு புத்துணர்ச்சியி னைக் கொடுக்கும். இந்த புத்து ணர்ச்சி எத்தகைய பிரச்சினை வந்தாலும் உங்களின்மனதி னை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அத்துடன் தே வையில்லாத குழப்பங்களையும் குறைக்கும். அதனால் எப்பிரச்ச னை வந்தாலும் நீங்கள் தனி ஆ ளாக நின்று சமாளிக்கும் தைரியம் உங்களுக்குக் கிடைக்கும்.
2. கவலை ஏதும் இல்லை (Hakuna Matata)
முதல் யோசனை சரியாக வராதபட்சத்தில் இசை உங் களுக்குக் கைகொடுக்கும். உங்களுக்குப் பிடித்ததி லே மிகவும் அருமையான பாட்டு என்றவுடன் நினை வுக்குவரும் பாடல்களைத் தேர்வு செய்து கொள்ளுங் கள். அவற்றைக் கேட்கத்தொடங்குங்கள், அவை உங்க ளின் மனதினை அழுத்தமான சூழ்நிலையில் இருந்து மென்மையான சூழ்நிலைக்குத் தி ருப்பிவிடும். மாறாகஎரிச்சலூட்டும் பாடல்களை நீங்கள் கேட்கும் பட்ச த்தி ல் உங்களின் கோபம், எரிச்சல், மன அழுத்தம் அனைத்தும் அதிக மாகக்கூடும். பின்னர் மன அமைதி க்கான வழியே இருக்காது. எனது மன அமைதிக்கு நான் தேர்வு செய் திருக்கும் பாடல் “Hakuna Matata” எனும் டிஸ்னி கார்டூ ன்களின்பாடல். இதன்பா டல் வரிகளை தமிழில் கேட்கும்போது “கவலை ஏதும் இல்லை, தொல் லை இல்லை, வாழ்வே ரொம்ப கூல் அது செம்ம தூள்….” என்றவாறு இருக்கு ம். நாம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இரு க்கும்போது இப்பாடல் வெளியுலக வாழ்க்கையின் சுவாரஸ்யத்தினைப் பற்றிய உண்மையினைக் கொடுக்கு ம். வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது வெறும் மாயை என்ற அடித்தள நோக்கத்துடன் இந்தப் பாடல் இயற்றப்பட்டுள் ளது புரியும். கவலைப் பட்டால் மட்டும் கவிழ்ந்த கப்பல் திரும் ப வந்திடாது என்பது இதில் பின்புலமாகக் கூறப்படும் நிக ழ்வுலக உண்மை.
3. அமைதிக்கு நேரம் ஒதுக்குங்கள்
ஒருவேளை இசையும் உங்களுக்குக் கைகொடுக்க வில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலத் தோன்றும். அப்போது அமை திக்கான நேரத்தினை எடுத்துக்கொ ள்ளுங்கள். இது கண்டிப்பாக உங்க ளுக்கு உதவும். நாம் அமைதியாக இருக்க முயலும் போது நமது மூச்சில் நமது கவனம் கொஞ்சம் வரும், அதுவே நமது மன அழுத்தத்தி னை குறைக்க உதவும். உதாரண மாக, நீங்கள் உங்கள் மன எண் ணங்கள் அனைத்தையும் அடக்கி க்கொண்டு நிதானமாக இருக்க முயலுங்கள் தற்போது உங்களின் இதயத்துடிப்பினைக்கூட உணர இயலும். இதற்கு யோ கா, தியானம் ஏன் தூக்கம்கூட உதவலாம். நாம் தூங் கி எழும்போது நமது மூளையி ல் தேவையில்லாமல் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நினைவுகள் , பிரச்சினைகள் அனைத்தும் அக ற்றப்பட்டு புத்துயிர் பெற்றிருக் கும். ஒரு சிறு தூக்கம் அல்லது சிறிது நேரம் நீங்கள் கண்னை மூடி இருப்பதுகூடஉங்களின் மனதில்உள்ள பிரச்சனை களை வெகுவாகக் குறைக்கும். இந்த அமைதிக்குப் பின்னர் நீங்கள் செய்யும் எந்த வொரு செயலிலும் தெளிவான சிந்தனையுட ன் நீங்கள் ஈடுபட இயலும். இதற்குக் காரணம் நமது நரம்புகள் ஒரு சிறு ஓய்வு பெற்று மீண்டும் செயலாற்ற தொட ங்குவதே ஆகும்.
அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுவது வேண்டுமானால் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அது அவ்வளவு எளி தான விஷயமல்ல. மன அமைதி கிடை க்காமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒருமுறை அமைதிக்கான வழியினை சரி யாகக் கண்டுபிடித்துவிட்டால் பின்னர் அதே பாதையில் ஒ வ்வொரு முறையும் பயணம் செய்யலாம். இந்த பாதை உங்களின் வாழ்க்கை முறையுடன் ஒன்றியிருக்க வே ண்டும்.
மேற்கூறப்பட்ட அனைத்தும் நாம் பிரச்சினைகளில் இருக்கும்போது மட்டும் செய்தால் போதாது, ஒவ் வொரு நாளும் நம்மை புதுப்பித்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும். அ ப்போதுதான் அது பழக்கமாக மாறு ம். நாம் எளிதாக மகிழ்ச்சிபெற வழி வகுக்கும். நிம்மதியான வாழ்க்கை யினைப்பெற நிம்மதியில்லாமல் அலையும் இந்த வாழ்க்கை முறை யில் இதுபோன்ற பழக்கங்கள் நம் மனதையும், மூளையையும் தினமு ம் பல்லாயிரக்கணக்கான பிரச்ச னைகளை எதிர்கொள்வ தற்கு தயார்படுத்தும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts