Published On: Wed, Jan 14th, 2015

மறதி கோளாறா? அசைவம் வேண்டாமே

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை வருவது இயல்பானதே.

சத்தான உணவு உட்கொள்ளாதவர்கள், எப்போதும் பிசியாக இருப்பவர்கள், டென்ஷன் மனநிலையில் இருப்போருக்கும் கண் பார்வைக் கோளாறு மற்றும் மூளையில் கட்டி, தலையில் அடிபடுதல் போன்ற பிரச்னைகளாலும் மறதி ஏற்படலாம்.

மறதிப் பிரச்னை வராமல் தடுக்க சிறு வயதில் இருந்தே வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளவும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளும் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகள் வேண்டாம். சூடான மற்றும் மசாலா கலந்த உணவுகளையும் தவிர்க்கவும். மறதியின் முதல் கட்டமாக குழப்பம் ஏற்படும்.

அரை மணி நேரத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பது மறந்து போகும். மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ளவும்.

தியானம் மூலம் மனக் குழப்பத்தைத் தவிர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

பச்சைக் கீரைகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

சத்துள்ள உணவு பழக்கத்துடன் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் ஞாபக மறதியை எளிதில் சரி செய்ய முடியும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts