Published On: Sun, Feb 19th, 2017

மார்பகத்தை எடுப்பாகவும் ஆரோக்கியமாகவும் பாத்துக்கணுமா?… தயவுசெஞ்சு இத பண்ணுங்க…

பொதுவாகவே பெண்கள் காலையில் அணியும் பிராக்களை இந்த நாள் முழுவதும் அவிழ்ப்பது கிடையாது. வேலைப்பளுவால் பெண்கள், அவர்களுடைய உடலைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்வதே இல்லை.

ஆனால் பெண்களுக்குத்தான் உடல் ரீதியான பிரச்னைகள் அதிகம். சமீபக் காலமாக, புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வில் மருத்துவர்களும் அதிக அளவு கவனம் செலுத்துவது பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குறித்து தான்.

பொதுவாகவே பெண்கள் காலையில் அணியும் பிராக்களை இந்த நாள் முழுவதும் அவிழ்ப்பது கிடையாது.

வேலைப்பளுவால் பெண்கள், அவர்களுடைய உடலைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்வதே இல்லை. ஆனால் பெண்களுக்குத்தான் உடல் ரீதியான பிரச்னைகள் அதிகம்.

சமீபக் காலமாக, புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வில் மருத்துவர்களும் அதிக அளவு கவனம் செலுத்துவது பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குறித்து தான்.

மார்பகங்களை சரியாகப் பராமரிக்காததால் நிறைய பிரச்னைகள் உண்டாகின்றன. அதற்கான பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் நிறைய ஆலோசனைகளைக் கூறுகின்றனர்.

தூக்கத்தின் போது

 

தூங்கப் போவதற்கு முன்பு , அணிந்திருக்கும் பிராவை கண்டிப்பாக அவிழ்த்துவிட வேண்டும். அப்போதுதான் மார்பகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

 

அதேசமயம் இரவில் அணியும் ஆடைகளும் தளர்வானதாக இருத்தல் அவசியம் என்ற ஆலோசனையை மருத்துவ நிபுணர் குல்கர்ணி கூறுகிறார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதால் மார்பகங்களின் அளவு பெரிதாகிவிடும் என சிலர் கருதுகின்றனர். நிச்சயமாக இல்லை. அதற்கென தனியே உடற்பயிற்சி முறைகள் உண்டு. தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை புஸ் – அப், தம்பல்ஸ் எடுத்து வந்தால் அது உங்கள் மார்பகத்தை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். ரத்த ஓட்டம் சீராகும்.

மசாஜ் செய்யுங்கள்

இதை நீங்கள் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். ஹெர்பல் ஆயில் ஏதேனும் ஒன்றை கைகளில் எடுத்து தடவுங்கள். விரல்களால் மார்பகங்களை அழுத்தி, கடிகார திசையிலும் அதன் எதிர் திசையிலும் நன்கு மசாஜ் செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கணவரை மசாஜ் செய்துவிடச் சொல்லுங்கள்.

சுய பரிசோதனை

பொதுவாகவே பெண்களுக்கு, மெனோபஸ் காலத்திற்கு பின் மார்பக புற்றுநோய் குறித்த அச்சம் அதிகரிக்கிறது. மார்பகங்களை மாதத்திற்கு ஒருமுறை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.

அமுக்கிப் பார்க்கும்பொழுது கட்டிகள் இருப்பதுபோல ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.

சரியான பிராக்களை அணியுங்கள்

இந்த விஷயங்களில் தான் பெண்கள் பலரும் தவறு செய்கிறார்கள். உடல் அமைப்பு எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. பெண்கள் சரியான அளவுகளில் பிராக்களை அணிய வேண்டும்.

ஒவ்வொரு முறை புதிதாக பிராக்கள் வாங்கும்போதும் டேப் கொண்டு மார்பகங்களை அளந்து, அதற்கேற்றதுபோல் சரியான அளவுகளில் வாங்க வேண்டும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts