விந்தணுக்களை வீரியமாக்கும் இந்த ஜூஸை இன்னைக்கே ட்ரை பண்ணிப் பாருங்க…

நம்முடைய யஉணவுப் பழக்க முறையிலேயே பாலுணர்வைத் தூண்டும் ஏராளமான விஷயங்கள் இருந்தும்கூட அவற்றை முறையாகக் கையாளத் தெரியாமல் உடல் வலிமையை இழந்து, டாக்டரிடம் ஆலோசனையும் சிகிச்சையும் பெறுபவர்கள் நிறைய பேர்.

சிலர் தாங்களாகவே வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவ்வளவு சிரமமேயின்றி, வெறும் 50 ரூபாய்க்குள்ளாக செலவு ஆகும்படி வீட்டிலேயே மிக எளிமையாக சில விஷயங்களைச் செய்துகொள்ள முடியும்.

பாலுணர்வைத் தூண்டி, அதிக வேகத்துடன் செயல்படத் தூண்டும் மிக எளிய காம லேகியத்தை உங்கள் வீட்டிலேயே செய்து ட்ரை பண்ணுங்க…

இந்த காமலேகியம் செய்ய பெரிதாகப் பொருட்செலவு எதுவும் தேவையில்லை. வெறும் 50 ருபாய் போதும். இதற்கு வெறும் தர்பூசணியும் எலுமிச்சையுமே போதுமானது.

 

தேவையான பொருட்கள்

தர்பூசணி – 1

 

எலுமிச்சை – 3

தயாரிக்கும் முறை

தர்பூசணி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சியில் போட்டு, நன்கு அரைக்க வேண்டும். அதில் விதைகளையும் பழத்தில் உள்ள வெள்ளைப் பகுதியையும் நீக்காமல் அப்படியே பயன்படுத்த வேண்டும். பச்சை நிற ஓடுப் பகுதியை மட்டுமே நீக்க வேண்டும்.

பழத்தை அரைத்து 1 லிட்டர் அளவுக்கு ஜூஸ் எடுக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் எலுமிச்சை சாறைச் சேர்த்து இன்னும் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

ஒரு லிட்டர் சாறு 400 மில்லியாக வற்றும்வரை கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.

இந்த கலவையை நன்கு குளிர்வித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

மிக அதிக ஆற்றலுடைய இந்த காம லேகியத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனும் இரவு தூங்கச் செல்லும் முன் 2 ஸ்பூனும் சாப்பிட வேண்டும்.

இதில் இனிப்பு இல்லை என சர்க்கரை, வெல்லம் போன்ற எந்த இனிப்புப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.

சர்க்கரையைச் சேர்த்தால் இதன் வீரியம் குறைந்துவிடும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts