Published On: Tue, Mar 21st, 2017

விந்தணுக்கள் குறித்து இதுவரை தெரியாத சில உண்மைகள்…!

விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என பலரும் நினைத்து வருகின்றனர். சில ஆண்கள், சுய இன்பம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக நினைக்கின்றனர்.

இன்னும் சிலர் ஒவ்வொரு துளி விந்துவிலும் இவ்வளவு துளிகள் இரத்தம் உள்ளது. ஆகவே விந்து வெளியேறுவதால் இரத்த அளவு குறைவதாக நம்புகின்றனர்.

ஆனால், இவை அனைத்துமே ஒரு கட்டுக்கதை தான். எனவே, விந்தணுக்கள் குறித்த உண்மை தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

**சாதாரணமாக ஒரு ஆண் விந்துவை வெளியேற்றும் போது, குறைந்தது 1 டீஸ்பூன் அளவு இருக்கும். ஆனால் இது வயது, முந்தைய விந்து வெளியேற்றம் மற்றும் கிளர்ச்சி நிலை போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும்.

**ஆண் வெளியேற்றும் விந்துவில் வெறும் 1 சதவீதம் தான் விந்தணுக்கள் இருக்குமாம். எஞ்சிய விந்துவில் ஃபுருக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், நீர், நொதிகள், சிட்ரிக் அமிலம், புரோட்டீன், ஜிங்க் மற்றும் பாஸ்பேட் போன்றவை இருக்கும் என்கிறார்கள்.

**ஆண் வெளியேற்றும் ஒரு டீஸ்பூன் விந்துவில் சுமார் 200-500 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இதுவும் வயது உள்ளிட்ட காரணக்களை பொறுத்து வேறுபடும்.

**உண்மையில் விந்துவை வெளியேற்றுவது நல்லது தான். ஏனெனில் விந்துவை வெளியேற்றுவதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விந்து வெளியேற்றப்பட்டு, புதிதாக மீண்டும் விந்து உற்பத்தி செய்யப்படும்.

**விந்துவை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு போதிய நேரம் தேவைப்படுகிறது. ஆனால், விந்துப்பை நிரம்பி வழிந்து, நீங்கள் விந்துவை வெளியேற்றாமல் இருந்தால், உடல் மூளைக்கு சமிஞ்கைகளை அனுப்பும். இதன் மூலம் உடலினுள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, உடனே சுய இன்பம் காண அல்லது உறவில் ஈடுபட தோன்றுகிறது. இல்லையெனில், தாமாகவே வெளியேறிவிடும்.

***எனவே, சுய இன்பம் காண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு அல்ல. எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts