Published On: Sun, Dec 4th, 2016

ஸ்லிம்மான இடைக்கு சில டிப்ஸ்

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப்பார்கள். நம் உடலுக்கு கலோரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசியம்.
கலோரி:

பெண் வயதுக்கு வந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும். 13-18 வயதுள்ள பெண்களுக்கு 2,200 கலோரிகள் தேவை.

பருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம். தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

இரும்புச் சத்து:

தினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை 100 கிராம் சாப்பிடலாம்.ர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி பால் குடிக்கலாம்.உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும்.முளை கட்டிய பயறு மற்றும் வைட்டமின் ‘சி’ அதிகமுள்ள நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

கால்சியம்:

கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்துக் குறைவதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்து விடும்.தினமும் ஒரு லிட்டர் பால் குடிப்பது அவசியம்.வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

ராகி, எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கிறது.அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts