பெண்கள் கேட்ட செக்ஸ், பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு தீர்வு
கேள்வி – 01 : என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா?
பதில் : மண்பானை செய்கிறவர்களிடம் சுத்தமான களிமன் வாங்கி அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக்கொண்டு, காலையில் குளித்துவிடவும். இதை வாரம் மூன்று நாள் செய்யலாம்.
கேள்வி – 02 : எனக்கு வயது 26. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. கணவருக்கு தாம்பத்ய உறவில் நாட்டமில்லை. கணவர் வீட்டார் எல்லோரும் என்னிடம் குறையிருப்பதாகச் சொல்லிக்கொண்டு, இன்னும் ஆறு மாதங்களில் கரு தங்கவில்லையென்றால், கணவருக்கு மறுமணம் செய்துவிடுவோம் என்கிறார்கள். கணவரோ மாதத்தில் ஒரு நாள் சேர்ந்தாலே கருத்தரிக்கும் என்கிறார். அது சாத்தியமா? படுக்கைக்கு வந்ததும் தூங்கிவிடுகிறார். என் கணவர் சொல்வதுபோல் மாதத்தில் ஒருநாள் உறவு கொண்டாலே குழந்தை பிறக்குமா? எத்தனை நாட்கள் உறவு கொள்ள வேண்டும்? என்ன செய்வது?
பதில் : ஒருமுறை உறவு கொண்டாலே குழந்தை பிறக்கும் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லை. கணவருடைய தவறான அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். கணவர் உங்களிடமிருந்து ஒதுங்கியிருக்க என்ன காரணம் என பாருங்கள். பேசுங்கள். மனரீதியாக அவருக்கு ஏதேனும் கோளாரா அல்லது வேறு பிரச்சனைகளா என முதலில் கண்டுபிடியுங்கள்.
அவரது அம்மா உங்களிடம் நல்ல முறையில் பழகும்பட்சத்தில் அவரது உதவியை நீங்கள் நாடலாம். மாமியாரிடம் உண்மையைச் சொல்லி விசாரிக்கச் சொல்லலாம். கணவரின் தயக்கத்துக்கு என்ன காரணம் என்பதை அவருக்கு நெருங்கிய நபர்களின் மூலமாக முதலில் கண்டுபிடித்துப் பேசச்சொல்ல வேண்டும். மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அவருக்கு பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால், அதற்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
உங்களுக்கு மாதவிடாய் சரியாக இருந்தால், மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து கணக்கிட்டால் பதினான்காம் நாள் கருமுட்டை வெளியாகும். அதற்கு முன்பாக மூன்று நாட்களிலிருந்து தொடர்ந்து ஒருவாரத்திற்கு உடலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். தைரியமாக இருங்கள்.
கேள்வி – 03 : என் வயது 64. கணவருக்கு 67. நானும் அவரும் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்கிறோம். இப்போதும் நானும் அவரும் உறவில் உச்சத்தை அடைகிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் உடல்ரீதியாக ஏதேனும் பாதிப்பு வருமா? எத்தனை வயதுவரை உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?
பதில் : 60 வயதைக் கடந்தும் ஆரோக்கியமான தாம்பத்ய உறவு உங்க