வயது முதிர்வு, ஆண்களின் செக்ஸ் வாழக்கையை எப்படிப் பாதிக்கிறது?
செக்ஸ் வாலிபர்களுக்கு மட்டுமல்ல. 70 அல்லது 80 வயதுள்ள ஆண்களும் தங்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக உடலுறவில் ஈடுபடுவதை தொடரலாம். ஆண்களின் வயது முதிர்வால், பாலியல் ஆசைகள் அவர்களின் 20 வயதுகளில் இருந்தது போல இருக்காது. இருப்பினும், செக்ஸ் என்பது அவர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய அனுபவமாக இருக்கக்கூடும். முதுமையடைதல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் உடல்மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கை செயல்பாடாகும். இந்த மாற்றங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கான திறனை பாதிக்கும். வயது சார்ந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
ஆண்குறி விறைப்புத்தன்மை, முன்பிருந்தது போல் அல்லாமல் பெரியளவில் இருத்தல்
விறைப்புத்தன்மை பெற நீண்ட நேரம் தேவைப்படுதல்
குறுகிய நேர புணர்ச்சிப் பரவசநிலை
விந்து வெளியேறும் வேகம் குறைதல்
விந்து அளவு குறைதல்
ஃபோர்ப்ளே மேலும் கூடுதலாக தேவைப்படுதல்
புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்தவுடன் விரைவாக விறைப்புத்தன்மையை இழத்தல்
ஆண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும் வயதுதொடர்பான நிலைமைகள் எவை?
ஆண்களின் பாலியல் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில நோய்கள் மற்றும் நிலைமைகள் பின்வருமாறு:
கீல்வாதம்:
கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டுவலி காரணமாக பாலியல் செயல்பாடு சிரமமாகலாம். வலி மற்றும் முடங்கியிருத்தலிலிருந்து விடுபட மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். போதுமான ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் வெவ்வேறு நிலைகளில் முயற்சி செய்தல் ஆகியவை பாலியல் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோய்:
ஆண்களுக்கு ஆண்மையிழப்பு ஏற்பட வழிவகுக்கும் நோய்களில் நீரிழவு நோயும் ஒன்றாகும்.மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதின் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து நிலைமையை மேம்படுத்தலாம்.
இதய நோய்கள்:
பெருந்தமனி தடிப்பு (இரத்த நாளங்கள் கடுமையடைந்து சுருங்குதல்) மற்றும் உயர் இரத்த அழுத்தம்