புரோட்டா கடைக்கு சகாக்களோடு விசிட் அடித்த எஸ்.ஜே.சூர்யா!

தென்காசி: தென்காசியில் உள்ள பிரபலமான புரோட்டா கடைக்கு திடீரென தனது நண்பர்கள் சகிதம் புரோட்டா சாப்பிட வந்தார் இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இதனால் ரசிகர்கள் குஷியாகி அவரை சுற்றி வளைத்துப் பேசத் தொடங்கினர்.

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா நெல்லை மாவட்டத்தை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார். அப்படத்திற்கான இடம் தேர்வு, லொகேஷனுக்காக குற்றாலத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பிரபலமான பார்டர் புரோட்டா கடைக்கு 9.30 மணி அளவில் தனது சகாக்களோடு சாப்பிட சென்றார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் அவரை மொய்க்கத் தொடங்கினர்.

உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்ப அதிரிச்சி கொடுத்தார். சினிமாக்காரர்கள் என்றாலே மக்களிடம் இருந்து தூரம்போல் தான் நிற்பது வழக்கம். ஆனால் தற்போது சரத்குமார் வரிசையில் எஸ்ஜே சூர்யாவும் இணைந்து மக்களோடு நட்பையும், நலன்னையும் விசாரிப்பது புதிய முயற்சி என்று ரசிகர்கள் பாராட்டினர்.

அடுத்த படம் எப்படி இருக்கும் சூர்யா..’அ…ஆ’ மாதிரி இருக்குமா, அல்லது அதை விட பெட்டரா இருக்குமா…?

This Post Has 0 Comments

Leave A Reply

You must be logged in to post a comment.