ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் நயன்தாரா – த்ரிஷா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா – த்ரிஷா இடையிலான போட்டா போட்டி ரொம்பவே பிரசித்தம்.

ஒருவர் வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிப்பதில் இருவருமே கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல.

கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் போட்டி இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

சம்பள விஷயத்தில் நயன்தாரா கொஞ்சம் முன்னே இருக்கிறார். அவரை விட ரூ 20 லட்சம் குறைவாக வாங்குகிறார் த்ரிஷா.

நயன்தாரா நடிப்பதாக பேசிக் கொண்டிருந்த படங்கள் திரிஷாவுக்கும் த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் நயன்தாராவுக்கும் போனது நினைவிருக்கலாம்.

‘குருவி’ படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை மாற்றி விட்டு திரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை நயன்தாரா கடுப்போடு திருப்பித் தந்தார் நயன்.

இதுபோல் ‘சத்யம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரம் நயன்தாரா அப்படத்தை தட்டி பறித்துக் கொண்டார்.

படங்களில் மட்டுமல்ல, விளம்பர வாய்ப்புகளிலும் இப்படித்தான்.

சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையொன்றில் சேலை விளம்பரத்துக்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே கடையில் திரிஷா விளம்பர தூதுவராக உள்ளார்.

இருவருக்கும் இடையே யாருக்கு அதிக விளம்பர போர்டுகள் வைப்பது என்பதில் மோதல் நடக்கிறதாம்.

சரி இத்தோடு போனதா விவகாரம் என்றால்…. ம்ஹூம். அவரவர் பர்சனல் சமாச்சாரங்களில் கூட இந்தப் போட்டி வந்துவிட்டதாம்.

சமீபத்தில் நயன்தாராவின் முன்னாள் காதலர் ஆகிவிட்ட பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படமொன்றை தனது டுவிட்டரில் திரிஷா வெளியிட்டார்.

நயன்தாரா சும்மா இருப்பாரா… இதற்கு பதில் தரும் விதத்தில் ஹைதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் திரிஷாவின் நெருங்கிய நண்பரான நடிகர் டகுபதி ராணாவுடன் நெருக்கமாக அமர்ந்து சிரித்து சிரித்து பேச, அதை அப்படியே ஆந்திர சேனல்கள் லைவாகக் காட்ட, த்ரிஷா விட்ட உஷ்ண மூச்சில் ஏசி அறையே சூடாகிவிட்டதாம்.

இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம் த்ரிஷா!

This Post Has 0 Comments

Leave A Reply

You must be logged in to post a comment.