Published On: Thu, Apr 18th, 2013

நீரிழிவு நோய் இருக்கிறதா? காது கேக்காம போயிடுமாம்!!

தற்போது நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பற்றி அறிய இரத்தம், கண்கள், இதயம் என்று பரிசோதனை செய்து கொள்வர். ஆனால் தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, பக்கவிளைவுகளை கண்டறிய ஒரு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நீரிழிவு நோயால் காது கேட்கும் திறனும் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் நீரிழிவு நோய் இல்லாமல் காது செவிடாகுபவர்களை விட, அந்த நோய் இருப்பவர்களுக்கு இரு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கண்டறிந்து கூறுகின்றனர். மேலம் இந்த நோய் இருப்பவர்கள் காதுகளுக்குள் ஏதேனும் சப்தங்கள் ஏற்பட்டால் உடனே காது சிறப்பி மருத்துவரை போய் பார்ப்பது நல்லது என்று கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் வீட்டில் டிவியை பார்க்கும் போது சப்தம் குறைவாகத் தான் இருக்கிறதென்று, அதிகமாக சப்தம் வைத்து கேட்பவராய் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

வயதானவர்கள் சிலருக்கு இரண்டு காதுகளும் சமஅளவில் கேட்காமல் இருக்கும். அதற்கு காரணம் சர்க்கரை வியாதி என்று கூறமுடியாது. அது வயது ஏற்பட்டதால் உண்டாகியிருக்கும் என்று கூறலாம். ஆனால் தற்போது அடிக்கடி இளம் வயதினருக்கு ஒரு காது மட்டும் சற்று மந்தமடைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தால் அதற்கு சர்க்கரை நோயும் ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் நீரிழிவு நோய் இருப்பர்களுக்கு காதுகளில் கெராடின் என்று பொருள் குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும். அதனால் காதுகளில் அழுக்கானது அதிகமாக சேரும். அவ்வாறு காதுகளில் அழுக்கானது அதிகமாக சேர்ந்தால் அது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறி என்றும் கூறலாம். மேலும் காதுகளில் அழுகானது அதிகமாக சேர்ந்தால் காது செவிடாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது.

ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் கண்கள், இதயம் மற்றும் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதுடன், காதுகளையும் மறக்காமல் அடிக்கடி பரிசோதித்துப் பாருங்கள் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts