Published On: Thu, Apr 18th, 2013

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை!

நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தாது உப்புக்கள் வைட்டமின்கள்

வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. வெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தையம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.

நூறுகிராம் வெந்தையக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. அதோடு வெந்தையக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.

வெந்தையக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.

இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தையக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தையக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும். தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தையக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம் தாய்ப்பால் ஊறும்.

வெந்தையக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால் இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப்புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1 டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts