Published On: Sun, Mar 6th, 2016

மனநோய்கள் உடல் நோய்களாக வெளிப்படும்

உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு

அறிகுறிகள் வெளிப்படும்.

ஆனால் பரிசோதனையில் எந்தநோயும் இராது. இவ ர்கள் பொய் சொல்லவோ, நடிக்கவோ செய்வதில் லை. நோயுள்ளது என நம்புகிறார்கள்.

நோய் ஏக்கம் அல்லது Hypochondriasis

உடலில்நோய்கள் இல்லாமலே நோய் இருப்பதாக அவதிப்படுவார்கள். இவர் கள் மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இ ருப்பார்கள். எல்லா பரிசோதனைகளை திரும் ப திரும்ப செய்வார்கள்.

உடலாக்கு நோய் (Conversion Disorder)

மனதில் தோன்றும் ஆசை, பயம், ஆத்திரம், வெறுப்பு, உடலில் நோ யாக வெளிப்படும். சிலருக்கு வலிப்பு சிலருக்கு பேச முடியா மை, சிலருக்கு கைகால் செயலிழப்பு என உடல் பாதிப்பாக தெரிந்தாலும் உடலில் எந்த நோயும் இராது.

இதன் மூலம் இவர்கள் மனதின் விருப்பு வெ றுப்புகளை வெளிப்படுத்த வேண்டியதில் லை அடுத்ததாக கடமை, தண்டனை, சிக்க ல்கள் முடிவெடுத்தல் போன்றவற்றில் இருந்து தப்பித்து கொள்வது இதன் பின்னணி.

பொய் நோய்கள் :

இவர்களுடைய மனம், தன்னை மற்றவர் கள் கவனிக்க வேண்டும் என்ற தீவிரத்தி ல் நோய் இருப்பதாக வெளிப்படுவது இது நடிப்பில் லை.

சில சிக்கல்களி லிருந்து தப்பிக்க சில காரியங்க ளை சாதிக்க நினை க்கும் பின்னணி இருக்கும்.

– பிறர் நினைவூட்டினாலும் ஞாபகம் வராத நிலை

– இது நடிப்போ பொய்யோ அல்ல. இந்நோய் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை இருக் கலாம்.

தன்னிலை மறந்த நோய் (Amnesia)

இவர் திடீரென்று தன் வீட்டையும் ஊரையு ம் விட்டு வெகுதொலைவில் உள்ள புதிய இ டத்தில் தான் யார் என்றே தெரியாமல் வாழ் வார். வெளியில் பார்த்தால் எல்லாம் சரியா கவே இருப்பதுபோல தோன் றும்.

பலவகை பர்சனாலிடி நோய் :

ஒரே மனிதர் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு நபர்களைப் போல சொல், செயல், நடை, உடை எல்லாவற்றிலும் மாறுபட்டு இருப்பார்.

இயல்பிழப்பு நோய்

கோவில் சூழ்நிலை அல்லது இசை முழக் கம் போன்றவற்றின்போது தனக்கு சாமி பிடித்துவிட்டதாக பேய்பிடித்துவிட்டதாக ஆடுவார்கள்.

மனதில் அழுந்திக் கிடக்கும் கோபம், வெ றுப்பு, இயலாமை ஒரு கட்டத்தில் வெளிப் பட்டு நோயாக வெளிவரும்.

பாலினக் கோளாறுகள் :

– தன் இனப்பெருக்க உறுப்புகளை வெளிக்காட்டுதல்

– பிற பாலினரின் உடைகளை பொரு ட்களை பார்த்து இன்பம் காணு தல்.

– முன்பின் தெரியாதவரிடம் உரசி இன்பம்காணுதல்.

– குழந்தைகளுடன் உடலுறவு கொள்ள ஆர்வம்

– உடலுறவின் போது தம்மை மற்றவர் அடித்து துன்புறுத்தினால் மகிழ்ச்சியடைதல்.

– உடலுறவில் மற்றவரை துன்புறு த்தி மகிழ்தல்

– பிற ஆண் பெண் உடையை அணி ந்து இன்பம் காணுதல்

– பிறர் உறவு கொள்வதை மறைந் திருந்து ரசித்தல்

இவையாவும் இயல்புக்கு மாறுபட்ட நிலை மனநோய்கள்.

அதிக உணவு உண்ணுதல் Bulimia

சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். எடை பெருகிக் கொண்டே இரு க்கும்.

உணவை மறுத்தல் :

சிலர் உணவு உண்ணா மல் எலும்பும் தோலு மாய் மெலிவர்.

மனக் கட்டுப்பாடிலிழப்பு நோய் :

– இனிமையாகவே பழகும் மனிதர், திடீரென கட்டுப்படுத்த முடியாத கோபமும் வெடிப்புமாகி சூழ்நிலையை மறந்து செயல்படுதல்.

– சூழ்நிலை, கௌரவம் ஆகியவற்றை மறந்து மற் றவர்கள் பொருட்களை திருடுதல் அதில்மகிழ்ச்சி காணுவர். ஆனால் திருட ர்கள் அல்ல.

– சிலருக்கு தீ விபத்தை உண்டாக்கி மகிழ் ச்சி காணும் மனநிலை

– தொடர்ந்து சூதாடி எல்லாவற்றையும் இழத்தல்

 

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts