Published On: Sun, May 28th, 2017

Tamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்!

பதில் : பிறப்புறுப்பு என்பது மிக மெல்லிய செல்களால் ஆனது. எனவே அங்கே அடிபடாமலிருப்பதற்காகப் பாதுகாப்புக் கவசமே ரோம வளர்ச்சி. பிறப்புறுப்பு என்றில்லை. உடலின் வேறு சில பகுதிகளில் ரோம வளர்ச்சி காணப்படுவதும் இதற்காகவே. நீங்கள் வயதுக்கு வராமலிருந்து, முடி வளர்ச்சியும் இல்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும். வயதுக்கு வந்துவிட்டதால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஒருசிலருக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும்கூட ரோம வளர்ச்சி வரலாம். எனவே இதற்கும் உங்கள் எதிர்கால தாம்பத்ய வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எல்லா பெண்களைப்போல நீங்களும் திருமணத்திற்குத் தயாராகலாம்.

கேள்வி – : என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு கிட்னியுடந்தான் வாழ்கிறேன். அதனால், மாதவிலக்குப் பிரச்சனைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் தான் பிறக்குமா?
பதில் : நீங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக்கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் தாராளமாக செய்துகொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சனைகளுக்குச் சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம்.

ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால், உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க 50 சதவீதம் வாய்ப்புகள் உண்டு.

கேள்வி – என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகின்றன. என் மார்பகங்களின் காம்புகள் உள்ளே இழுத்தபடி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக்கொண்டே போகின்றன. என்ன தீர்வு?
பதில் : இதற்கு ”இன்வர்ட்டட் நிப்பிள்ஸ்” எனச் சொல்வார்கள். அப்படியிருப்பின் நீங்கள் திருமணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சனை தானாக சரியாகிவிடும்.
மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா என தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்துவரை நேரில் கலந்தாலோசிக்கலாம். வலி இருந்தாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். பிரசவத்துக்குப் பிறகு குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது இவை சரியாகும். கவலைப்பட வேண்டாம்.

கேள்வி – : நான் ஒரு டீன்-ஏஜ் பெண். எனக்குப் பின்பக்கம் மிகவும் பெருத்துக் காணப்படுகிறது. தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். இத்தனைக்கும் நான் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். பின்பக்கம் குறைவதாக இல்லை. செக்ஸ் அனுபவம் இருப்பவர்களூக்கும், செக்ஸில் ஆர்வம் அதிகமிருப்பவர்களுக்கும் தான் இப்படி இருக்கும் என்று கேலி செய்கிறார்கள். குறைக்க வழியே கிடையாதா?
பதில் : உங்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு உடற்பயிற்சிதான். சாப்பாட்டைத் தவிர்ப்பதால் எந்தப் பலனும் இல்லை. இடுப்பு, தொடைகள், கால்கள் போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்தால் குணம் தெரியும். இதுவும் ஒரேநாளில் பலன் தராது. தன்னம்பிக்கையுடன் விடாமல் செய்தால் பலன் நிச்சயம்.
உங்கள் தோழில்கள் கிண்டல் செய்கிற மாதிரி பின்பக்க சதை பெருத்திருக்கவும், செக்ஸ் உணர்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் அனுபவம் உள்ளவர்களுக்குப் பின் பக்கம் பெருத்திருக்கும் என்பது வேண்டுமென்றே உங்களை வெறுப்பேற்ற அவர்கள் சொல்கிற விஷயங்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்

கேள்வி – : என் வயது 26. எனக்கு எப்போதும் மாதவிலக்கு எட்டு, ஒன்பது நாட்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் நான் உறவு கொண்டால் கருத்தரிக்குமா?
பதில் : மாதவிலக்கு என்பது இப்படி எட்டு, ஒன்பது நாட்களுக்கெல்லாம் வரக்கூடாது. இது ரத்தசோகையில் கொண்டுவிடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப்போக்கு இருக்கிறது என்பதற்கு ரத்தப்பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்ட, அவர்கள் சத்துள்ள ஆகாரம் உண்ன வேண்டியது அவசியம். தினம் இரண்டு மூன்று பழங்கள் சாப்பிடவும். ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்றவை நல்லது. பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இரண்டுவகைக் காய்களை தினம் ஒரு கப் சாப்பிட வேண்டும்.

இவை மாதவிலக்கின்போது உடல் இழக்கும் இரும்புச்சத்தை ஈடுகட்டும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். மருத்துவரை சந்தித்து, இப்படி நாள்கணக்கில் தொடரும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளவும். கவனிக்காமல் விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகிவிடுவீர்கள்.
முதலில் இப்பிரச்சனையைச் சரி செய்துகொண்டு பிறகு உறவைப்பற்றி யோசிக்கலாம். பொதுவாகவே மாதவிலக்கு நாட்களில் தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் உங்களைச் சரிசெய்துகொண்டு மற்றவைகளைப் பாருங்கள்.

நான் என் பெற்றோருக்கு கடைசிப் பெண்; பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாமல் குறையோடு பிறந்தேன். ஒரு சமயம் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, ஸ்கேன் மூலமாக இந்த விஷயம் தெரிய வந்தது. மற்ற‍ பெண்களைப்போல் எனக்கு பூப்பெய்தல் நிகழாது, ஆனால் தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபடலாம் என்று… என் குறைபாட்டை நினைத்து அதிர்ச்சி ஏற்பட்டாலும், வாழ ஒரு வழி இருக்கிறதே என நினைத்து, மனதை தேற்றிக்கொண்டேன்.

ஆனால், இவ்விஷயத்தை தெரிந்து கொண்ட என் உறவினர்கள், என்னை உதாசினப்படுத்தி பேசுவர். அப்போதெல்லாம் என் அண்ணன் தான் என் மனதை பக்குவப்படுத்துவார். பட்டப்படிப்பு முடிந்து அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில், என் குறைக்கு ஏற்றாற்போல், மனைவியை இழந்த, குழந்தையுடன் இருக்கும் ஒரு வரன் வந்தது; திருமணமும் நடந்தது. என் கணவர், என் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் உள்ளவர்; சந்தோஷமாகவே வாழ்கிறேன். அவருடைய குழந்தையாக இருந்தவள், இப்போது, என் குழந்தையாகிவிட்டாள். அவள் என்னை , ‘அம்மா’ என்று, அன்புடன் அழைப்பாள். நாங்கள் இருவரும் பாசமாகத்தான் இருக்கிறோம்.

ஆனால், என் கணவர் வீட்டினரைத் தவிர, அவருடைய உறவினர்களுக்கு என் குறை தெரியாததால், ‘இன்னொரு குழந்தை எப்போது…’ என்றும், ‘என்னதான் இருந்தாலும் நீ, அவளுக்கு வளர்ப்புத் தாய் தான்…’ என்கின்றனர். என் கணவரும், என் குழந்தையும் ஆறுதலாக இருந்தபோதும், ‘ஏன் நாம் மட்டும் இப்படிப் பிறந்தோம்; நம்மாலும் ஒரு குழந்தை பெற முடிந்திருந்தால் இந்த பேச்சுக்கள் வாங்குவோமா…’ என, எண்ணத் தோன்றுகிறது. அம்மா, என் உறவினர்களுக்கும், இந்த உலகத்திற்கும் என் போன்ற நிலையில் உள்ள குழந்தை பெறாதவர்களுக்கும், ‘நச்’சென்று தாய்மையின் புனிதத்தை புரிய வையுங்களம்மா! பெற்றால்தான் பிள்ளையா? அவள் என் தங்கப்பதுமை! — இப்படிக்கு, அன்பு மகள். அன்பு மகளுக்கு, தாய்மை என்பது பெண்மையின் பெருமைமிகு விஷயம்தான்; ஆனால், அதை விட பெருமையானது எது தெரியுமா. தான் பெற்றெடுக்காத குழந்தைக்கு, மலஜலம் கழுவி, கண், காது, மூக்கு துடைத்து, அது பசிக்கு அழுகிறதா, உடல் உபாதையில் சிணுங்குகிறதா என கண்ணுற்று, பாராட்டி, சீராட்டி வளர்க் கிறாளே… அவள் அந்த பெற்றவளை விட பல மடங்கு உயர்ந்தவள். பசியால் அழுத ஞானசம்பந் தருக்கு, ஞானபால் கொடுத்த அம்பிகைக்கு நிகரானவர்கள்.

அத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் நீ, மனம் சஞ்சலப்படலாமா? மகளே…திருமணமாகி, கர்ப்பப்பை இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களையும், திருமணத்திற்கே வழியில்லாத பெண்களையும் நினைத்துப்பார்.. அவர்கள் வேதனையை விடவா உன் வேதனை பெரிது? சோதனை குழாய் மூலமாவது ஒரு குழந்தையை பெற்று விடவேண்டும் என்று லட்ச லட்சமாய் செலவழிப்போரும், பத்து ஆண்டு, இருபது ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் சமுதாயத்தின் ஏளன பார்வையால், தங்களுள் ஒடுங்கிப் போகும் தம்பதியினரை ஒப்பிடுகையில், நீ, எத்தனை கொடுத்து வைத்தவள் … உனக்கு கர்ப்பப்பை இல்லாததனால், சினைமுட்டை உற்பத்தி இல்லை; மூன்று நாள் தொந்தரவு இல்லை; கர்ப்பம்தரித்துபடும் பத்து மாத அவதி இல்லை; செத்துப்பிழைக்கும் பிரசவ வேதனை இல்லை; வயிற்றை கிழித்து, குழந்தையை எடுக்கும் சிசேரியன் இல்லை; கர்ப்பப்பை புற்று நோய் வராது; ‘மெனோபாஸ் பீரியடு’ வந்து ஹார்மோன் ஏற்ற, இறக்கத்தால் மனதாலும், உடலாலும் அவதியுறமாட்டாய்.

இத்தனை கஷ்டங்களையும், அனுபவிக்காமல், தங்க விக்ரகம் போன்ற ஒரு குழந்தைக்கு நீ தாய் ஆகி இருக்கின்றாய். ஆனால், உனக்கு முன், உன் கணவனை மணந்தவளோ, இத்தனை கஷ்டங்களையும் சுமந்து, தன் உயிரைக் கொடுத்து, உனக்காக ஒரு குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு, அதன் மழலை இன்பத்தை அனுபவிக்காமல் போய் சேர்ந்துவிட்டாள். உண்மையில் அவள் அல்லவா அபாக்கி யவாதி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? அக்குழந்தையை நல்லமுறையில் வளர்த்து, சமுதாயத்திற்குமுன் மாதிரியாக கொண்டு வருவதில் அல்லவா அந்த தாயின், தாய்மையின் சிறப்பு இருக்கிறது! எனக்குத் தெரிந்த செவிலியர் பெண் ஒருத்தி, ஆயிரக்கணக்கான பிரசவங்களுக்கு துணை நின்றவள்.

‘குழந்தையை வெளியில் எடுத்து, தொப்புள் கொடி கத்தரித்து, அசுத்தங்களை சுத்தம் செய்யும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே… அது, வேறு எதிலும் கிடைக்காது…’ என்பார். நீ, உன் பிறவிக்குறையை நினைத்து மருகமருகத்தான் அற்பர்களின் நாக்கிற்கு குஷி ஏற்படும்; மாறாக, ‘இன்னொரு குழந்தை எப்போது ?’ என்று கேட்டால், ‘இதோ என் தங்கக் கட்டி. இவள் ஒன்றே போதும்; இவள் ஆயிரம் குழந்தைகளுக்கு சமமானவள்.’ என்று பெருமை பேசு; மகளே! உனக்கும், உன் கணவனின் குழந்தைக்கும் பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக நம்பு. பத்து, பதினைந்து ஆண்டுகள் நீ பெறாத பிள்ளையை, தாய்பாசத்தை கொட்டி வளர்த்தால், குழந்தையின் சாயல், உன்னை ஒத்து மாறிவிடும். ‘சித்தி’ என்ற வார்த்தையை தமிழ் சினிமாவும், இலக்கியமும் பொய் புனைவு செய்து, கொடுமைக்காரி என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. சித்திகளில் சொக்கத் தங்கங்களும் உண்டு என்பதை உன்னைப் பார்த்து, இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும்

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts