Published On: Tue, Oct 14th, 2014

பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே(VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத்தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மையை பேணும்.

இவ்வாறு ஈரத்தன்மை பேணப்படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதரனமாக்(HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசியமாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிகளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர்ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்களுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங்க்களை இது கொடுக்கலாம்.

இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது , சில பெண்களுக்கு மனரீதியான உளைச்சலைக் கொடுக்கலாம். தங்களுக்கு ஏதொ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்த நிலை ஏற்படுகின்றது அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.

உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெறால் சில நோய்களில் கூட இவ்வாறு திரவங்கள் வெளிவரலாம்.

எவ்வாறு நோய்களினால் வெளிவருகின்ற திரவங்களை சாதாரண திரவங்களில் இருந்து வேறு பிரித்தறிவது?

சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக(CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும்.இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால்(MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும்.இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.

சாதாரணமாக வெளிவரும் திரவம்

மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலுறவின் போது, கர்ப்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங்களில் அதிகரிக்கலாம்.

ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமானது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடையதாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறன சந்தர்ப்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டாலே போதும் இந்தப் பிரச்சினை சுகமாகி விடும். இது பொதுவாக கிருமிகளின் தொற்றுகளால் ஏற்படும்.

மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக , அல்லது இடையிடையே ரத்தம் போகும்போது இது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஆக பென்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்று அஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.

கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந்தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.
தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்
பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்
சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்
இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங்கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டுமல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க ஏற்படுகின்ற சாதாரணமான நிகழ்வே!

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts